மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை தடுக்கும் வழிகள் |
பல்வேறு பயிர்களில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. குறிப் பாக, மக்காச்சோளத் தில் படைப்புழு தாக்கு தல் என்பது பரவலாக காணப்படுகிறது. பெரிய அளவில் மக சூல் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
பொதுவாக மக்காச்சோள பயிரில் இலைகளுக்கு அடிப்பகுதியில் இந்த புழுவின் முட்டை குவியல்கள் காணப்படும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதி யில் சுரண்டி பாதிப்பை உண்டாக்கும்.
எனவே மக்காச்சோளம் சாகுபடிக்குமுன் கட்டா யம் கோடை உழவு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிக் கொண்டு வரப்பட்டுவெயில், பறவைகளால் அழிக் கப்படும். விதைப்பின்போது கடைசி உழவில்உரத்துடன் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண் டும். பயிரின் ஆரம்பகால வளர்ச்சி பருவத்தில் ஏக்கருக்கு 10 பறவை தாங்கிகள் வைக்கலாம்.
மேலும், 5 இனக்கவர்ச்சி பொறி கள் வைத்து ஆண் அந்துப் பூச்சி களை கவர்ந்து அழிப்பதன் மூலம் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த லாம். ஊடுபயிராக பயிறுவகை, சூரியகாந்தி பயிர்களை கட்டாயம் பயிரிட வேண்டும்.
15 நாள் பயிராக இருக்கும்போது வேப்பங் கொட்டை சாறு அல்லது வேம்பு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 முறை வயலை பரிசோதிக்க வேண்டும். அறுவடைக்கு பிறகு பயிர் கழிவுகளை அகற்றி, புழுவின் முட்டைகள் இருந்தால் அழிப்பது முக்கியம் என வேளாண் துறையினர் கூறுகிறார் கள்.
0
Leave a Reply